தங்கர் பச்சான் படத்தை குடும்பத்துடன் இலவசமாக பார்க்கலாம்..! எப்படி தெரியுமா ? 

 
1

இயக்குனர் தங்கர் பச்சான் தொடர்ந்து மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் நடிகர் பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்…

தங்கர் பச்சானின் படங்கள் என்றாலே மனித உறவுகளின் மேன்மையை குடும்பங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்பதால் யதார்த்த மனிதர்களிடம் அவரது படங்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

கருமேகங்கள் கலைகின்றன படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இப்படத்திற்கான குடும்ப காட்சி ஒன்றை திரையிட ஏற்பாடு செய்துள்ளார்.

வருகிற 26ம் தேதி நடக்கும் இந்த சிறப்பு குடும்ப காட்சி போடப்படுகிறது.இந்த சிறப்பு திரையிடலின் போது படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும்.

இந்த கான்டஸ்டில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் குடும்ப புகைப்படத்தை..அவர்கள் குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதில் கலந்து கொள்பவர்களின் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

1

 

From Around the web