”நாங்கள் நான்காகப் போகிறோம்” நீலிமா ராணி வீட்டில் விசேஷம்..!
 

 
நீலிமா ராணி

பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

தமிழில் மெட்டி ஒலி, சித்தி, வாணி ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் நடித்து பிரபலமாக இருப்பவர் நீலிமா ராணி. இதயதிருடன், திமிரு, நான் மகான் அல்ல போன்ற கவனிக்கத்தக்க படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

நடிகை நீலிமா, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தனது திருமண நாளை இருவரும் கொண்டாடினர்.அப்போது நடிகை நீலிமா ராணி சமூக வலைத்தளத்தில் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து” ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 20 போக வேண்டும்” எங்களுக்கு மகிழ்ச்சி என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web