சரக்கிற்கு நாங்க அடிமை இல்லை ... ஊறிப்போன சம்பரதாயம்...வெளியான ‘தசரா’ டீசர்..!! 

 
1

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் நானி. தெலுங்கில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் அவர், தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான டக் ஜெகதீஷ், ஷ்யாம் சிங்கா ராய், அடடே சுந்தாரா ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன. 

DASARA

அந்த வகையில் நானியின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தசரா’. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

DASARA

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. நானியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

From Around the web