நாங்கள் ஒன்றாக தான் இருக்குறோம்- ப்ரியாமணி வெளியிட்ட புகைப்படம்..!
கணவர் முஸ்தாப்பா ராஜுவை விட்டு பிரிந்துவிட்டதாக பரவி வந்த செய்திகளை பொய்யாக்கும் விதமாக ஒரு நடிகை ப்ரியாமணி ஒரு காரியம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய ப்ரியாமணி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் படங்களில் நடித்துள்ளார். அதனால் இவரை தமிழ் சினிமா நடிகை என்று குறிப்பிடுவதை விட, பான் இந்தியா நடிகை என்றே குறிப்பிடுவது வழக்கம்.
தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கும் ஷாரூக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ப்ரியாமணியின் கணவர் முஸ்தப்பா ராஜூ தனது முதல் மனைவியை முறைப்படி விவகாரத்து செய்யவில்லை என்று சர்ச்சை எழுந்தது. அதனால் ப்ரியாமணி - முஸ்தப்பா ராஜூ பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தீபாவளி தினத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரியாமணி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்தி பொய்யாகியுள்ளது.
 - cini express.jpg)