விவேக் சாரின் கனவை நம்மால் நிறைவேற்ற முடியும்- சிபிராஜ்

 
விவேக் சாரின் கனவை நம்மால் நிறைவேற்ற முடியும்- சிபிராஜ்

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நாம் எல்லோரும் மனதுவைத்தால் நிறைவேற்ற முடியும் என்று நடிகர் சிபிராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தமிழக மக்களால் சின்ன கலைவாணர் என்று கொண்டாடப்பட்ட நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவருடைய சமூகநலன் சார்ந்த அக்கறையையும் இயற்கையை அவர் நேசித்த விதத்தையும் பற்றி சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் நடிகர் விவேக்கிற்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ள கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகராக விவேக் விட்டுச் சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாது. ஆனால் அவரின் 1 கோடி மரங்கள் நடும் கனவினை நாம் அனைவரும் மனது வைத்தால் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடிகர் விவேக்கை சந்தித்த போது அவரிடம் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப செயல்பட்டு வந்த விவேக் இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவிட்டார். விவேக்கின் நீண்ட நாள் லட்சியத்தை நிறைவேற்றும் விதத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டுள்ளதற்கு பல நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
 

From Around the web