இத்தனை உயிரை காவு வாங்கின இந்த பள்ளிக்கூடம் தேவையில்லை...அடிச்சு நொறுக்குங்க - வெளியான சார் படத்தின் டீஸர்..!
Jun 20, 2024, 08:05 IST
கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்’. இந்த படத்தில் விமல், சாயா தேவி கண்ணன், சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது .
அதில் படிப்பறிவே இல்லாத ஒரு கிராமத்தில் பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு டீச்சராக விமல், இன்னொரு டீச்சராக நாயகியும் வரும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் தொல்லை, பள்ளிக்கூடத்தை இடிக்க ஏற்படும் கிராமத்து வில்லனின் முயற்சி, அதை எப்படி இருவரும் சேர்ந்து முறியடிகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரியவருகிறது.
 - cini express.jpg)