வீக்கெண்டு சூப்பரான ட்ரீட்..! ஓடிடிக்கு வருகிறது சூர்யாவின் 'ரெட்ரோ'..!

 
1

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான 'கங்குவா' எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் ரிலீசான இப்படம் ஏகப்பட்ட ட்ரோல்களையும் சந்தித்தது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்தார் சூர்யா. இதனால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எழுந்தது.

சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ், நாசர், சிங்கம்புலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்து நடித்தனர். அத்துடன் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அப்பாவுடன் இணைந்து கேங்ஸ்டராக இருக்கும் சூர்யா, காதலிக்காக அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறார். ஆனாலும் அவரின் அப்பா மகனை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். இதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் 'ரெட்ரோ' படத்தின் மீதிக்கதை. இப்படம் ரிலீசான சில நாட்களிலே பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடி வசூலை கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 31 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'ரெட்ரோ' ரிலீசாகவுள்ளது. இந்த வாரம் வீக்கெண்டை கொண்டாட ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும்.

சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. திரிஷா, யோகி பாபு, ஷிவிதா, ஸ்வாசிகா, அனகா மாயா இரவு, சுப்ரீத் ரெட்டி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா இரண்டு விதமான ரோல்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சூர்யா 45 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு 'வேட்டைக்கருப்பு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

From Around the web