"நல்லவேளை சாய் பல்லவி தங்கச்சியாக நடிக்கவில்லை” சிரஞ்சீவி..!

 
சாய் பல்லவி மற்றும் சிரஞ்சீவி

லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிரஞ்சீவி அப்படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியை பாராட்டி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபிடா படத்தை தொடர்ந்து சேகர் கம்மூலா இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘லவ் ஸ்டோரி’. நடிகை சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு கோலாகலமாக நடந்தது. அப்போது படக்குழுவினர் சிரஞ்சீவியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய சிரஞ்சீவி, நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று வேடிக்கையாக கூறினார்.

சாய் பல்லவியை புகழ்ந்து பேசும் சிரஞ்சீவியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக போலோ ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web