சகோதரரின் பேச்சுலர் பார்ட்டியில் அமலா பால் செய்த காரியம்..!
 

 
அமலா பால்

மூத்த சகோதரர் வழங்கிய பேச்சுலர் பார்ட்டியில் நடிகை அமலா பால் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குத்தாட்டம் ஆடிய வீடியோவை அவரே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவுக்கு பிறகு நடிகை அமலா பால் ஆக்டிவாக இருக்கும் இடம் இன்ஸ்டாகிராம் ஆகும். அவருடைய பதிவுகள் எப்போதும் லைக்ஸுகளை குவிக்க தவறுவது கிடையாது. சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளார் அமலா பால்.

தன்னுடைய மூத்த சகோதரரின் திருமணத்துக்காக தற்போது கேரளா சென்றுள்ளார். அங்கு சகோதரர் வழங்கிய பேச்சுலர் பார்ட்டியில் நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது மதுபாட்டில்களுடன் நடனமாடிய வீடியோக்களை இன்ஸ்டாவில் அவரே பதிவிட்டுள்ளார். இது பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.இதுதொடர்பாக இன்ஸ்டாவில் தகவல் பதிவிட்டுள்ள அவர், எனது அண்ணனின் பேச்சுலர் பார்ட்டி இது. உடன் மணமகள் மற்றும் அவருடைய தோழியும் உள்ளனர். இதுபோன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆண்களுக்கு மட்டும் தான் உரிமையுள்ளதா? இப்படி கேட்பதற்கு காரணம், நான் ஆண்களை மிகவும் நேசிக்கிறேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

தமிழில் கடைசியாக அமலா பால் நடிப்பில் ஆந்தாலாஜி படமான 'குட்டி ஸ்டோரி' வெளியாகி இருந்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் 'அதோ அந்த பறவை போல' படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது.

From Around the web