என்னது... பாலாவும் ஷிவானியும் அண்ணன் தங்கச்சியா..?

 
பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷிவானிக்கு ’ரக்‌ஷா பந்தன்’ வாழ்த்துக் கூறி நடிகர் பாலாஜி முருகதாஸ் பதிவிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4-யில் போட்டியாளராக பங்கேற்றனர் ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ். அந்த வீட்டுக்குள் எப்போதும் இருவரும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டு இருந்தனர். இதை பார்க்கும் சக போட்டியாளர்கள் இருவரையும் கேளி கிண்டல் செய்வது அப்போது டிரெண்ட் அடித்தது.

ஒருமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நடிகை ஷிவானியின் தாயார், பாலாஜியுடன் மகள் நெருங்கி பழகுவதை கடுமையாக கண்டித்தார். இதனால் ஒரு வாரம் முழுக்க இருவரும் அழுதபடியே நிகழ்ச்சியில் இருந்து வந்தனர். அதனால் இருவருக்குமிடையில் காதல் உருவாகிவிட்டதாக ரசிகர்கள் கருதினர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, ஷிவானியுன் பாலாஜியும் அவ்வப்போது சந்தித்து வந்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கெற்றும் வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், ஷிவானிக்கு வாழ்த்துக் கூறி பாலாஜி முருகதாஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டர். அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக நினைத்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web