என்னபா பண்ணி வெச்சிருக்கீங்க..! இதுதான் கோட் 3வது சிங்கிள் அப்டேட்டா? 

 
1

கோட் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலக அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன்களை படக் குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றார்கள்.

கோட் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வீடியோவாக வெளியாகி உள்ளன. அதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். குறித்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன.

இந்த நிலையில், தற்போது நாளைய தினம் கோட் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கள் பாடல் வெளியாக உள்ளது என ப்ரோமோ ஒன்றை இன்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். எனினும் குறித்த ப்ரோமோவில் விஜயின் ஒரு ஸ்டெப் கூட இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே இரண்டு வீடியோ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. விசில் போடு என்ற முதல் பாடலில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டு இருந்தார்கள்.

இதன் இரண்டாவது பாடல் விஜய் - சினேகா காம்போவில் வெளியாகி இருந்தது. சின்ன சின்ன கண்கள் என ஆரம்பிக்கும் இந்த பாடல் சமீபத்தில் உயிரிழந்த பவதாரணியின் குரலில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இவ்வாறான நிலையிலே நாளைய தினம் கோட் படத்தில் இருந்து  மூன்றாவது சிங்கிள் பாடலும் வெளி யாக உள்ளது. ஆனாலும் இதில் விஜயின் ஒரு ஸ்டெப்பைக்கூட வெளியிடாமல் மீனாட்சி சவுத்ரியுடன் அவர் காணப்படும் புகைப்படத்தை மட்டுமே காட்டியுள்ளார்கள். இதற்கு நேரடியாக பாடலை மட்டும் வெளியிட்டு இருக்கலாம் என ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றார்கள்.


 


 

From Around the web