என்னங்க சொல்றீங்க..! லியோ படம் காப்பியா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

 
1

நடிகர் விஜய் நடித்திருக்கும் படம், லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, கெளதம் மேனன், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

அதேபோல், வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. அண்மையில் இப்படத்திற்கான ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 30ஆம் தேதி நடப்பதாக இருந்து, ரசிகர்களுக்கான பாஸ் பிரச்னை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதையெல்லாம் மறக்கடிக்கச் செய்யும் வகையில் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ’Badass’ ரிலீசாகி ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றது.

இந்நிலையில் லியோ படம், ஹாலிவுட் படமான ‘A History of Violence’ படத்தின் காப்பி என்று சமூக வலைதளத்தில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. லியோ படத்தின் ட்ரெய்லரை வைத்து ஹாலிவுட் படம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள், அதனை டீகோட் செய்துள்ளனர்.

A History of Violence படத்தின் கதை: இப்படத்தின் கதையின் நாயகன் தான் வசிக்கும் ஊரில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். அப்போது ஊருக்குள் வரும் கொள்ளையர்களை கொலை செய்கிறார். இதனால் கதையின் நாயகனை பலர் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை. இந்நிலையில் இப்படத்தை லியோவுடன் ஒப்பிட்டு வருகின்றனர், ஹாலிவுட் படம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள்.


 


 

From Around the web