என்னப்பா சொல்றீங்க..! தொகுப்பாளினி மணிமேகலைக்கா இந்த நிலை..?

 
1

கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஆங்கரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை திரட்டி வைத்திருந்தார் மணிமேகலை. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். இருப்பினும் ஒரு சில காரணங்களால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். அதேசமயம் யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை பெற்றோர்களை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.தொகுப்பாளினி மணிமேகலையின் சோகமான நிலை!

தனது கணவரை அன்பாக சோட்டி சோட்டி என்று அழைத்து இருவருக்கும் இடையேயான காதலை பல நிகழ்ச்சிகளின் மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்தோ அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் இருந்தோ மணிமேகலைக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் தான் சமீபத்தில் யூட்யூபில் மணிமேகலை, தான் கட்டி வரும் வீட்டிற்கு லோன் கூட கட்ட முடியாத பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் மணிமேகலையின் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web