என்ன சொல்லுறீங்க சந்தானம்! தளபதி விஜய் சங்கியா?

 
1

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்களோ சந்தானத்தை சங்கினு சொல்ல ஆரம்பித்தார்கள். 

கடவுள் நம்பிக்கை இல்லாமல் கோவில் கட்டி மக்களின் கடவுள் பக்தி மூலம் சம்பாதிக்கும் வடக்குப்பட்டி ராமசாமியாக நடித்தார் சந்தானம். நீங்க சங்கி தானே என சந்தானத்திடம் கேட்டதற்கு, நான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தேன்.

அவர் பெயர் சங்கீதா. அவரை நான் செல்லமாக சங்கி, சங்கினு அழைத்தேன். அப்படினா சங்கீதா சங்கி ஆகிவிடுவாரா என அவர் பாணியில் பதிலுக்கு கேட்டார்.

சந்தானம் சொன்னதை கேட்டவர்களோ, அய்யய்யோ அடுத்து விஜய்ணா பக்கம் திரும்பிவிடுவாங்களே. விஜய்ணாவின் மனைவி பெயர் சங்கீதா. அவரை செல்லமாக சங்கி, சங்கினு விஜய்ணா அழைக்கலாம். மனைவியை செல்லமாக சங்கினு அழைப்பதால் விஜய்ணாவை சங்கினு சொல்லிடுவாங்க போலயே.

அநேகமானோர் விஜய் என்றாலே விமர்சிக்க வாய்ப்பு கிடைக்காதா என காத்திருப்பாங்களே. இந்த நேரத்தில் இந்த சந்தானம் கூறிய விடயம் நடிகர் விஜயை விமர்சிக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது விட்டது.

மனைவியை சங்கினு கூப்பிட்டா விஜய் சங்கி தான் என்பாங்களே என தெரிவித்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

From Around the web