என்ன சார் நீங்களுமா..? மூத்த நடிகரின் சர்ச்சை பேச்சு..!

இந்த நிலையில் இவர் தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் பற்றியும் தனது தனிப்பட்ட காதல் திருமண வாழ்க்கை பற்றியும் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கியுள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. அரேஞ்ச் மேரேஜ் என்பது முட்டாள்தனம். காமம் என்பது கெட்ட வார்த்தையா பார்க்கப்படுது. கண், மூக்கு, காது எல்லாம் கெட்ட வார்த்தை இல்லை. அது மனிதனின் முக்கியமான பிரைவேட் பார்ட். ஆனால் அதனையும் கெட்ட வார்த்தை ஆக்கிவிட்டார்கள்.
இதனால் தான் நான் காதலை நம்புவதில்லை. காமத்தையே நம்புகின்றேன். திருமணம் எல்லாரும் செய்து கொள்ளும் விஷயம் தான். ஒரு ஆணும் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்கின்றார்கள். இதைவிட பெரிய முட்டாள்தனமும் இல்லை. காமெடியும் இல்லை.
அந்தப் பெண்ணுக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றாலும் வெளியே வர முடியாது. ஆனால் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் அப்படி இல்லை. எல்லா சுதந்திரமும் உண்டு. அதுதான் புத்திசாலித்தனமானது. எனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை ஆனால் 25 வருடமாக ஒரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.
எனினும் அது நிலைக்கவில்லை அதற்கு காரணம் சலிப்புதான்.. எனக்கு இழுத்துப் போர்த்தி கொண்டு அழுது கொண்டு இருக்கும் பெண்களை பிடிக்கவே பிடிக்காது. ஸ்டைலாக தைரியமான பெண்களை தான் நான் விரும்புவேன் என அவர் தெரிவித்துள்ளார்.