கூட்டணி அமைத்த காஜல், ரெஜினா, ஜனனி- எதற்கு தெரியுமா..?

 
கருங்காப்பியம் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஐந்து பிரபலங்கள் நாயகிகளாக நடிக்கும் ‘கருங்காப்பியம்’ என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

காட்டேரி, கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் ஆகிய படங்கள் மூலம் கவனமீர்த்தவர் இயக்குநர் டீ.கே. இவர் அடுத்ததாக  இயக்கும் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகிய நடிகைகள் ஒன்றிணைந்து நடிக்கின்றனர். படத்திற்கு ‘கருங்காப்பியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், வி.ஜே பார்வதி, வி.ஜே ஆஷிக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த நொய்ரிகா இப்படத்தில் புதுமுக நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் டீ.கே-வின் முந்தைய படங்களை போன்று இதுவும் திகில் கதையமைப்பில் உருவாகும் படமாகவே தெரிகிறது. றிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கின்றன.

சத்தமே இல்லாமல் ஊரடங்கு காலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியதாக சொல்லப்படுகிறது. தற்போது ‘கருங்காப்பியம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குவிந்து வருகிறது.

From Around the web