என்னங்க சொல்றீங்க.. இது உண்மையா ? பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி லேடி சூப்பர்ஸ்டாரா ?
அஜித்துடன் படம் இயக்க இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அது டிராப்பானதால் அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பிரதீப் ரெங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க அதிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிதியின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் அதிதி நடிக்க இருந்த ரோலில் லேடி சூப்பர் நயன்தாரா நடிக்க ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரெங்கநாதனுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகை என்ற கர்வம் இல்லாமல் இளம் நடிகருடன் நடிப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.