சுந்தர்சியின் பிறந்தநாள் பார்ட்டியில் என்ன நடந்தது? கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்!

சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்தும் சுந்தர்சியின் பிறந்தநாளை முன்னிட்டும் பார்ட்டி வைக்கப்பட்டது. அதாவது மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருந்தது. இந்த படத்தை ஜெமினி பீச்சர் சர்க்யூட் கடனில் சிக்கிக் கொண்டது, இதை கேள்விப்பட்ட திருப்பூர் சுப்பிரமணியன் தாமாக முன் வந்து படத்தை ஜெமினி பீச்சர் சர்க்யூட் நிறுவனத்திடம் 7 கோடி கொடுத்து வாங்கி வெளியிட்டார். படத்தின் வெளியீட்டு உரிமையை சுந்தர் சி பெற்றுக்கொண்டு படத்தை வெளியிட்டார்.
படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சுந்தர் சிக்கு அதிர்ஷ்ட மழை அடித்தது இதை கொண்டாடும் வகையில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த பார்ட்டியில், கே எஸ் ரவிக்குமார், மீனா, வரலட்சுமி, விஷால், அஞ்சலி, குஷ்பூ ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது விஷால், மீனா தோள் மீது கை போட்டார். குஷ்பூவை கட்டிப்பிடித்தார் என்று செய்திகளை வெளியிடுகிறார்கள். இது சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே நடந்து வரும் விஷயம்தான், பார்ட்டிக்கு செல்லும்போது அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பார்கள் இதில் ஒன்றும் தவறு இல்லை. இதைப் பார்த்த சில மீடியாக்கள் விஷால் தவறாக நடந்து கொண்டார் என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் இது மிகவும் தண்டிக்கத்தக்கது தவறானது. அது அன்பின் அடிப்படையில் பரிமாறப்பட்டது. இதில் வில்லங்கம் எதுவும் இல்லை தவறான எண்ணமும் இல்லை.
அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் விஷால் போதையில் இருந்தார் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. அவர் இப்போதுதான் காய்ச்சலில் இருந்து குணமாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி போதையில் இருந்தார் என்று சொல்ல முடியும். அவர் குடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத போது மீடியாக்கள் அனைத்தும் அவர் குடித்துவிட்டார் என்று வன்மத்தை கக்குகிறார்கள்.: தற்போது தான் விஷால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக அடுத்த படத்தின் கதை குறித்து விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் பார்ட்டியில் விஷால் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.