திடீரென்னு என்னாச்சு..! படுத்த படுக்கையாய் கிடக்கும் பிரபல நடிகை..!  

 
1

பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழ்பவர் ராக்கி சாவந்த். இவர் படங்களிலும் நடித்து சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக காணப்படுகின்றார்.

இவர்,  கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், நடிகை ராக்கி சாவந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த அனைவரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென ட்விட் பண்ணி வருகின்றார்கள்.

இவ்வாறு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் அவரின் நிலைமைக்கு அவரது முன்னாள் கணவர் அடில் கான் துரானி காரணம் என அவரது சகோதரர்  ராகேஷ் சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் ராக்கி சாவந்தின் பணம் அனைத்தையும் அவரது கணவர் துரோனி எடுத்துக் கொண்டதாகவும் அவருடைய தம்பி ராகேஷ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

From Around the web