நடிகர் அருண் விஜய்க்கு என்ன ஆச்சு..!! வெளியான ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுக்கும் போட்டோ..!!  

 
1

1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து பிரியம், கங்கா கவுரி, காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, ஜனனம், தவம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

Arun vijay

தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய், இயக்குநர் ஏ.ல்.விஜய் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஆக்சன் காட்சிகள் அதிகம் கொண்ட இந்த படத்தில், அருண் விஜய் டூப் எதுவும் பயன்படுத்தாமல் தானே சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அவ்வபோது இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் அருண் விஜய் கீழே விழுந்து அடிபட்ட சம்பவங்களும் உள்ளன. இந்தப் படத்தின் சண்டைக் காட்சியின் போது அருண் விஜய்க்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் உரிய சிகிச்சை எடுத்தும், தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக கூறி அருண் விஜய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் “காயம் ஏற்பட்ட என் முழங்காலுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.. இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web