நடிகர் ராதாரவிக்கு என்ன ஆச்சு ? கைத்தடியுடன் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!  

 
1
நடிகர் ராதா ரவி கடந்த 1976ஆம் ஆண்டே அவர் சில படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கு பேர் சொல்லும் வகையில் அமைந்த முதல் படம் கே.பாலசந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' படம் தான். அரசியல் நையாண்டி படமான இந்த படத்தில் அவர் சரிதாவின் கணவராக நடித்திருந்தார். ராதாவிக்கு அழுத்தமான வசனங்கள் கொடுத்ததுடன் அவர் நடிகவேளின் வாரிசு என்பதை நிரூபிக்க வைக்க எடுத்த கே.பாலசந்தரின் முயற்சி வெற்றியை தேடித்தந்தது.

ஆரம்பகாலத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த ராதாரவி பின்னர் ரஜினி, கமல் படங்கள் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றார்.

உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள் , உயர்ந்த உள்ளம் , சின்னத் தம்பி , பூவெளி , உழைப்பாளி, குரு சிஷ்யன், வீரன் வேலுத்தம்பி என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார். சமீபத்தில் வெளியான உதயநிதியின் 'மனிதன்' படத்தில் அவரது நடிப்பு அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றால் அது மிகையாகாது.

திரைப்படத்தில் மட்டுமின்றி 'திருவிளையாடல்', 'செல்லமே', ரங்க விலாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் ராதாரவி நடித்துள்ளார். மேலும் ஓரிரண்டு படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடித்த நடிகர் ஜெயபாலனுக்கு டப்பிங் குரல் கொடுத்தது ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ராதாரவி இன்று நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க வந்தார். அவர் நடக்க முடியமால் கைத்தடி உதவி உடன் கஷ்டப்பட்டு மெதுவாக நடந்து வந்து வாக்களித்தார். 71 வயதாகும் ராதாரவியின் தற்போதைய உடல் நிலையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 


 


 

From Around the web