என்ன ஆச்சு ஐஸ்வர்யா ராய்க்கு? கையில் கட்டுடன் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
May 17, 2024, 08:05 IST
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு மரியாதை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அணிந்து வரும் காஸ்டியூம்களை பார்ப்பதற்காகவே உலக அளவில் காஸ்டியூம் டிசைனர்கள் வருகை தருவார்கள் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் அவர் அணியும் காஸ்டியூம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளதை அடுத்து மும்பையில் இருந்து அவர் பிரான்ஸ் செல்வதற்காக தனது மகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரது கையில் கட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கையில் என்ன ஆச்சு என்று கேட்டபோது அவரும் பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டதாக தெரிகிறது.
இருப்பினும் கையில் கட்டுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராய் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து பலரும் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.