என்ன ஆச்சு ப்ரியங்கா சோப்ராவிற்கு... முகத்தில் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானது..! 

 
1

நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜான் சீனா, இட்ரிஸ் எல்பா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா தனது முகத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கடந்த சில வருடங்களாகவே படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட காயங்களை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல ‘சிட்டாடல்’ படத்தில் நடிக்கும்போது 80 சதவிகித சண்டைக்காட்சிகளில் பிரியங்கா சோப்ராவேதான் நடித்திருந்தார். இதுகுறித்து அப்போது பேசியிருந்த பிரியங்கா சோப்ரா, “கிட்டத்தட்ட 80% சண்டைக்காட்சிகளை நானே செய்தேன்.ஏனென்றால் நான் என் உடலையும் உள்ளுணர்வையும் நம்பியிருந்தேன். அப்போது நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று கூறியிருந்தார்.

From Around the web