என்ன இப்படி மாறிட்டீங்க... இதுக்கு தான் நடிப்பை விட்டு எஸ்கேப் ஆனீங்களா?

 
1

மலேசியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்து செட்டில் ஆன பிரியங்கா, அதற்குப் பிறகு ஒரு சில மாதங்களிலேயே தனது கணவரை பிரிந்தார் என செய்தி பரவியது.

எனினும் சிறிது காலங்களிலேயே மீண்டும் கணவருடன்  இணைந்து விட்டார். அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

தற்போது இவர் இறுதியாக நடித்து வந்த நள தமயந்தி சீரியலிலும் இவரது கேரக்டருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் சீரியலில் இருந்து விலகினீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்க, நான் விலகவில்லை இந்த கேரக்டருக்கு அடுத்த அத்தியாயம் வரும் வரை காத்திருக்கிறேன் என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மலேசியா தலைநகரமான கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றை திறந்து உள்ளார் பிரியங்கா நலக்காரி அதில் பில் வேலை செய்து கொண்டுள்ளதாக அவர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நடிப்பை விட்டு விட்டு பில் போட சென்று விட்டீர்களா? என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web