நான் உனக்கு சொல்ல வர விஷயம் உனக்கு HURT ஆகலாம்.. வெளியான 'நேசிப்பாயா’ படத்தின் டீசர்..!
சென்னை:2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான ‘குறும்பு’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் ‘அறிந்தும் அறியாமலும், பட்டியல்’ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.
பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தைக் கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பதிவைப் படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.