என்னது..? பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறதா ? அப்போ ஸ்டார் விஜய் 

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் 8வது சீசனில் இருந்து விலகினார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அழைத்து வந்தபோது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்றார்கள். இந்நிலையில் சேனலே மாறிவிட்டது. அதற்கு புது கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்கள்.

ஜனவரி மாதம் முடிந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனலில் பிப்ரவரி 23ம் தேதி இரவு 7 மணிக்கு கண்டு ரசிக்கலாம் என அந்த சேனலின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பழைய ஆட்டத்தை கலைச்சிட்டு புதுசா ஆடுவோம் என கேப்ஷன் போட்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்பை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அப்படி என்றால் இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வராதா, கலர்ஸ் தமிழ் சேனலில் தான் வருமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்பு எப்பொழுதும் இல்லாத மாதிரி நடந்து முடிந்த சீசனை வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பு செய்யவிருக்கிறார்கள். பழைய ஆட்டத்தை கலைச்சுட்டு புது ஆட்டம்னா பழைய சேனலை விட்டுவிட்டு புது சேனல் என்று தானே அர்த்தம் என பிக் பாஸ் பார்வையாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

From Around the web