என்ன பிரேம்ஜி உங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே...கடைசில துடைப்பத்தையும் தூக்க வச்சிட்டாங்களே..!   

 
1
நடிகர் பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நண்பர்கள் உறவினர்கள் மட்டும் சூழ மிக எளிமையாக நடைபெற்றது.

ஆனாலும் இவர்களது திருமண ரிசப்ஷன் சென்னையில் பலரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ரிஷப்ஷனில் சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைமைகள் வரை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்திருந்தார்கள்.

திருமணத்திற்கு பின்பு பிரேம்ஜி தனது காதல் மனைவிக்காக உணவு சமைப்பது, ட்ரிப் செல்வது என தனது சிறிய சிறிய  சந்தோஷங்களையும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், தற்போது பிரேம்ஜி ஆரம்பத்தில் சிங்கிளாக இருந்தபோது படங்களில் வெள்ளைக்கார பெண்களுடன் குத்தாட்டம் போட்டதும் தற்போது திருமணம் முடித்து வீட்டு வேலைகளை கவனிப்பதையும் அவருடைய மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிரேம்ஜி வீடு கூட்டுவது, பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, மனைவியின் ஆடைகளை காய வைப்பது என வீட்டு வேலைகளை செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு எப்படி இருந்த பிரேம்ஜி இப்படி ஆயிட்டாரே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web