டான் பட ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் செய்தி என்ன..?
Nov 11, 2021, 14:48 IST

கல்லூரி மாணவன் கெட்-அப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் ‘டான்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
’டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
எஸ். ஜே. சூர்யா, ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, பால சரவணன், விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தற்போது படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறிவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துள்ளது. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பலரும் இந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.