இது என்ன பா புது ட்ரெண்ட்..!  ரீ-ரிலீஸ் படத்துக்கு டீசரா?

 
1

2007-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த திரைப்படம் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி ரீ ரீலீசாகும் என அறிவித்திருந்த நிலையில் 'போக்கிரி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பார்த்த திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்திற்கான 4கே டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாள் வருகிற 22ம் தேதி வருகிறது. இதனை அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே அவர் நடித்த போக்கிரி மற்றும் துப்பாக்கி திரைப்படம்  21-ம் தேதி வெளியாகவுள்ளது.

From Around the web