என்ன சிவகுமார் சார் இதெல்லாம்..! அன்று செல்போன்... இன்று சால்வையா..? 

 
1

நடிகர் சிவகுமார் மகன்களான சூர்யா, கார்த்திக் நடிக்க வந்த பிறகு ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.எனினும் அதிலும் இருந்து விலகி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனாலும், திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் பழ.கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகுமார், சால்வை அணிவிக்க வந்த பெரியார் ஒருவரின் சால்வையை வாங்கி வீசியுள்ளார்.

அதாவது, குறித்த நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு மரியாதை செய்ய நீண்ட நேரம் காத்திருந்தார் பெரியவர் ஒருவரின். அன்பை மதிக்காமல்.. சால்வையை பிடுங்கி தரையில் வீசியுள்ளார் சிவகுமார்.

தற்போது குறித்த சம்பவம் வைரலாகி உள்ளது. 


 

From Around the web