கொரோனா காலத்தில் என்ன செய்கிறார் விஷால்..? 

 
கொரோனா காலத்தில் என்ன செய்கிறார் விஷால்..?

கொரோனா பரவலை தடுக்கு பொருட்டு மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமலில் இருக்கும் சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களும் நடிகர் விஷால் உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் வழங்கி உதவி செய்து வருகிறார்.

சினிமாவில் மட்டுமில்ல நிஜத்திலும் தான் ஒரு ஹீரோ என்பதை நிரூப்பிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கொரோனாவால் வேலை இழந்து சாலையோரத்தில் தவித்து வரும் மக்களுக்கு அவராகவே சென்று தினமும் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வருகிறார்.

தன்னுடைய தேவி அற்க்கட்டளை மூலம் இதற்கான பணிகளை அவர் முன்னெடுத்து வருகிறார். சென்னையில் சாலையோரங்களில் வசிக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை விஷால் பூர்த்தி செய்து தருகிறார்.

மேலும் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் கால்நடைகள், நாய் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளுக்கும் அவர் உணவு வழங்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு சூழலில் எளியோருக்கு உதவும் விஷால் குணத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web