இது என்ன நியாயம் ? ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளத்தில் இவ்வளவு பெரிய இடைவெளி -  ராஷி கண்ணா!

 
1

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து ‘அடங்கமறு’, ‘அயோக்கியா’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக ராஷி கண்ணாவின் நடிப்பில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் யோதா படமும் தமிழில் அரண்மனை 4 படமும் வெளியாகியது. ‘அரண்மனை 4’ திரைப்படம் ரூ,100 கோடியை கடந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷி கண்ணா கூறியதாவது:-

சுந்தர் சி போன்ற பெண்களை நம்பும் இயக்குநர்கள் வேண்டும். சினிமாவும் கலையும் பால் பேதங்களை கடக்க வேண்டுமென நினைக்கிறேன். இதுதான் அப்படி இருக்க சரியான நேரமாக கருதுகிறேன். ஆர்டிகள் 370, க்ரூ, அரண்மனை 4 போன்ற படங்கள்தான் ஆண்களின் படத்துக்கு இணையாக வசூலித்துள்ளதாக நிரூபித்துள்ளன. இந்த நேரத்தில் இதுமாதிரியான உரையாடல்களே இருந்திருக்கக் கூடாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். கலையின் மதிப்பீடு அதன் தன்மையை பொருத்திருக்க வேண்டுமே தவிர பால் பேதங்களை பொருத்து அல்ல. சினிமா இதையெல்லாம் கடந்திருக்க வேண்டும்.

உண்மையாக சொல்ல வேண்டுமெனில் ஆண்களுக்கும் எங்களுக்கும் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காலப் போக்கில் இது மாறுமென நினைக்கிறேன். இது தொடர்ச்சியான செயல்பாடு. கேன்ஸ் விழாவில் நடைபெற்ற சம்பவங்கள் மகிழ்ச்சியை தருகின்றன. எங்களுக்கான பாதையை அவர்கள் அமைத்துள்ளார்கள்.

அரண்மனை 4 படத்தில் இருந்தது பெருமையாக இருக்கிறது. பெண்கள் உலக அளவில் சாதித்து வருகிறார்கள். ரசிகர்கள் அதிகமாகப் படத்தினைப் பார்த்தால்தான் வசூல் கூடும். சினிமாவில் இந்தக் கணக்குதான் தற்போது தகுதியாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From Around the web