என்னம்மா சவுண்டு இப்படி பண்றீங்களேமா. நாங்கள் பயந்த மாதிரியே உங்களுக்கு நடக்குதே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சவுந்தர்யா நஞ்சுண்டன் என்கிற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அவரின் ரசிகர்கள்.
இந்நிலையில் குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கோமாளி ஆகியிருக்கிறார் சவுந்தர்யா. அதை பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோமாளி ஆனால் ஹீரோயினாக முடியாது சவுண்டுமா. உங்களை பயங்கரமாக கிண்டல் செய்தே நிகழ்ச்சியை ஓட்டுவார்கள். இது கூட தெரியாமல் சிக்கிவிட்டீர்களே என்றார்கள்.
சவுந்தர்யா வந்த முதல் ப்ரொமோவில் அவருக்கு சமைக்கத் தெரியாததை வைத்து கிண்டல் செய்திருந்தார்கள். இந்நிலையில் கேஸ் அடுப்பை பத்த வைக்கக் கூட தெரியாதா என சவுந்தர்யாவை புகழ் கலாய்த்த ப்ரொமோ வீடியோ வெளியானது.
இப்படி எல்லாம் கலாய்ப்பாங்கனு தானே பயந்தோம். நாங்கள் பயந்தது மாதிரியே நடக்குதே சவுண்டு. இந்த சீசனின் பலிகடா நீங்க தான். உங்களுக்கு சமையலே வராது. இதில் சமையல் நிகழ்ச்சியில் அதுவும் கோமாளியாக போகச் சொன்னது யார்?
விஷ்ணு விஜய் ப்ரோ, நீங்களாவது சவுந்தர்யாவை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?. ஆரம்பமே இப்படி என்றால் போகப் போக எப்படி எல்லாம் எங்க சவுண்டை கலாய்ப்பாங்களோ. நினைக்கவே பயமாக இருக்கிறதே. இது உங்களுக்கு தேவை தானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பவம் start..😎 | Cooku with Comali Season 6 - விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #CookuWithComaliSeason6 #CookuWithComali6 #GenGoldVsGenBold #CWC #LaunchPromo #VijayTelevision #VijayTV pic.twitter.com/r7aPBrXP46
— Vijay Television (@vijaytelevision) April 25, 2025