என்ன மேடம்...இன்னொரு காதல் வந்து விட்டதா?  ரச்சிதா மகாலட்சுமி வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

 
1

’சரவணன் மீனாட்சி’ உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் கிட்டத்தட்ட இறுதி வரை தாக்குப்பிடித்தார் என்பதும் தெரிந்தது. அவருடைய கணவர் தினேஷ் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போது தனது மனைவியை சந்திப்பதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று உருக்கமாக கூறியிருந்தார் என்பதும் ஆனால் கடைசி வரை அவர் ரச்சிதாவை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் மற்றும் ரச்சிதா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் இருப்பினும் இன்னும் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் இரு தரப்பு குடும்பத்தினர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ’செல்ஃப் லவ்’ என்ற கேப்ஷன் உடன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் இன்னொரு காதல் வந்து விட்டதா? மறுமணம் எப்போது? என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் அழகு தேவதை என்றும். உங்களை திரையில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளோம் என்றும். இன்னும் நிறைய திரைப்படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் பல்வேறு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. ஆனால் உண்மையிலேயே ரச்சிதாவுக்கு லவ் வந்து விட்டதா அல்லது ரீல்ஸ் வீடியோவுக்காக இப்படி போஸ் கொடுத்து உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web