மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக மீரா ஜாஸ்மின் செய்த காரியம்..!

 
மீரா ஜாஸ்மின்

மீண்டும் சினிமாவில் பிஸியாக முடிவு செய்துள்ள மீரா ஜாஸ்மின், அதற்காக செய்துள்ள காரியம் ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படம் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். ஆனால் அதற்கு முன்னதாகவே மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.

எனினும் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்தார். ஆனால் மலையாளத்தில் இவர் நடித்த பல படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘பாடம் ஒன்னு; ஒரு விலாபம்’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் பெற்றார். அதை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து அனில் ஜான் டைட்டஸ் என்கிற தொழிலதிபரை மணந்துகொண்டார்.

சில மாத இடைவெளிக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த மீரா ஜாஸ்மின் மிகவும் உடல் பருமனாக காட்சி அளித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார்.

தற்போது பல்வேறு கடின முயற்சிக்கு பிறகு மீரா ஜாஸ்மின் உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைத்த அவரது புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நடிகை மீரா ஜாஸ்மின் ஈஸ் பேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web