பிணமாக நடித்துவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா செய்த காரியம்..!

 
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இறந்துபோனது போல் நடித்து முடித்தவுடன் லட்சுமி அம்மாள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் தாயாரக நடித்து வந்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் இறந்துவிட்டது போல் காட்டப்படுகிறது.

அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடிக்கும் அடுத்தடுத்த திருப்பங்களை மையப்படுத்தி சீரியல் ஒளிப்பரப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் இறந்துபோனது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. இவர் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவின் உடன் பிறந்த சகோதிரி ஆவார். நடிகர் விக்ராந்தின் தாயாரும் இவர் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இறந்ததுபோல் நடித்துவிட்டு, இயக்குநருடன் ஷீலா எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

From Around the web