உடல் முழுவதும் தேனீக்களை பரவவிட்டு பிரபல நடிகை செய்த காரியம்..!

 
ஏஞ்சலீனா ஜோலி

பூமியின் செயல்பாட்டில் தேனீக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகை ஏஞ்சலீனா ஜோலியை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் உலகளவில் கவனமீர்த்துள்ளது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேச்சுரல் ஜியோகிராஃப் மாதயிதழுக்காக அவரை வைத்து நடத்தப்பட்டுள்ள போட்டோஷூட் மிகப்பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி வெள்ளை நிற ஆடையை அணிந்தபடி கேமரா முன் நிற்கும் ஏஞ்சலீனா ஜோலி மீது தேனீக்கள் மொய்க்கின்றன. அவருடைய தோள்பட்டை, மார்பு, முகம், கழுத்து, கை என அவருடைய உடலின் பல்வேறு பாகங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் காணப்படுகின்றன.

மனித சமூகம் மற்றும் பூமியின் செயல்பாட்டில் தேனீக்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்துள்ள புகைப்படக்கலைஞர் டான் விண்டர்ஸ் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில், 18 நிமிடங்கள் வரை நடத்தப்பட்ட இந்த போட்டோஷூட்டில் ஏஞ்சலீனாவின் உடலில் தேனீக்கள் மொய்த்துக்க் கொண்டிருந்தன. பெந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டோஷூட் மிகவும் சவாலாக இருந்தது.  40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் எடுத்த ‘பீ கீப்பர் போர்ட்ரைட்’ படத்தை முன்மாதிரியாக வைத்து அதே முறையை பின்பற்றி இந்த ஷூட் நடத்தப்பட்டது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web