என்ன...டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல காரணம் ஹிப் ஹாப் தமிழா ஆதியா..? 

 
1

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில்  17 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில் அந்த அணிக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரிடம் ஒருவர் வந்து  உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். ஒருவேளை அவர் தனது ரசிகராக இருக்கும் என்று நினைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி உடனடியாக சரி என்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து அந்த நபர் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்ததற்கு நன்றி என்று கூறிய போது அதிர்ச்சி அடைந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, ‘நீங்கள் என்னை யாரோ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூற, அதற்கு அந்த நபர் நீங்கள் ரோகித் சர்மா தானே என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் நான் ரோகித் சர்மா இல்லை, நான் இந்தியாவை சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் என்று கூறிய போது, அந்த நபர் ஓகே என்று கூறி சிரித்துக்கொண்டே சென்றார். இது குறித்த வீடியோவை ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

From Around the web