அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் என்ன செய்யவுள்ளார் தனுஷ்..?

 
நடிகர் தனுஷ்

தமிழ் திரைத்துறையில் எப்போதும் அதிக படங்களில் பணியாற்றக்கூடிய நடிகராக இருப்பது விஜய் சேதுபதி தான். ஆனால் அவரை தற்போது ஓரங்கட்டி விட்டார் தனுஷ். மாதம் ஒருமுறை அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருகிறது.

’கர்ணன்’ படம் ரிலீஸின் போது மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவித்தார் தனுஷ். அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் மூன்று மொழிப் படங்களில் தயாராகும் படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் தி கிரே மேன் பட படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் தனுஷ். விரைவில் சென்னை திரும்பவுள்ள அவர், கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கும் டி 44 படத்தில வர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. வெறும் மூன்று வாரங்களில் இப்படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மிகவும் சவாலான இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.

இதற்கு பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கும் அவருடைய 45-வது ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங் பணிகள் அகஸ்டு 20-ம் தேதி துவங்குகிறது. அதனால் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் தொடர்ந்து ஷூட்டிங்கில் இருக்கவுள்ளார் தனுஷ்.

From Around the web