இதை முத்து பார்த்தா என்ன ஆகும்..? நெட்டிசன்கள் கிண்டல்..!  

 
1

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.விஜய் டிவியின் 'வேலைக்காரன்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை தான் கோமதி ப்ரியா. இதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது  நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு புதிய தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாள சீரியல் நடிகருடன் தமிழ் பாட்டு ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளார் கோமதி பிரியா.இதை பார்த்த ரசிகர்கள், இதை முத்து பார்த்தா என்ன ஆகும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

From Around the web