சிறகடிக்க ஆசையில் அடுத்து நிகழ்ப்போவது?

 
1

 சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அதில் சத்யா தனது பர்த்டேக்கு கோவிலுக்கு வருமாறு மீனாவுக்கு போன் பண்ணி அழைக்க, முத்து  தன்னை மதிக்காத இடத்திற்கு நீயும் போகக்கூடாது என மீனாவை போக வேண்டாம் என தடுக்கின்றார். இதனால் நீ வரலாட்டி இங்க ஒன்றும் நடக்காது என சத்யா சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

இந்த விஷயத்தை மீனா ஸ்ருதியிடம் சொல்ல, அது எப்படி அவர் தடுக்கலாம் நீங்க என்ன அவருக்கு வேலைக்காரியா? நீங்க போயிட்டு வாங்க என ஸ்ருதி அனுப்பி வைக்கின்றார். இதனை விஜயா ஒளிந்து நின்று பார்க்கின்றார்.

அதன் பின்பு மீனா முத்துவின் பேச்சை மீறி கோவிலுக்கு சென்று எல்லாருக்கும் கூல் கொடுக்கின்றார். முத்து வீட்டுக்கு போனதும் உன் பேச்சை மீறி மீனா அவன் தம்பியை பார்க்க போய்ட்டா. நீ நம்ப இல்லாட்டி போய் கோவில்ல பாரு என விஜயா ஏற்றி விடுகிறார்.

இதனால் முத்துவும் கோவிலுக்கு போக அங்கு மீனா எல்லாருக்கும் கூல் ஊற்றிக் கொடுக்கிறார். இதனால் முத்துவும் வாங்க அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார் மீனா. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

From Around the web