என்னப்பா புதுசு புதுசா சொல்றாங்க..! லாஸ்லியாவின் தோழிதான் கவினின் காதலரா?

 
1

’சரவணன் மீனாட்சி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் ‘ டாடா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கவின், மோனிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் காதலர்களாக காண்பிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க கூட இல்லை என்றும் காதல் பிரேக்கப் ஆகியதாகவும் கூறப்பட்டது உண்டு.

இந்த நிலையில் கவினின் வருங்கால மனைவி மோனிகா, லாஸ்லியாவின் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து இருவரும் தோழிகளா? அல்லது போட்டோஷாப் புகைப்படமா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

From Around the web