என்னது... நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு சம்பள பாக்கி வைத்தாரா? பிரபலம் சொன்ன தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானத் திரைப்படம் அமரன்.மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து வெற்றி விழா நடைபெற்றது.
இந்த விழாவில், சிவகார்த்திகேயன், கமல் சார், எனக்கு ரொம்ப சரியாக சம்பளம் வந்தது சார். ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்துவிட்டது சார். இப்படி நடப்பதெல்லாம் அரிதான விஷயம் சார்.என்னுடைய படங்களின் ரிலீஸுக்கு முன் பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸில்தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் இருக்கறது மட்டும் இல்லாமல், வாங்கிய சம்பளத்தையும் திரும்பி வாங்கிக்கொண்டு போகிற ஆட்களும் இருக்கிறார். ஆனால், படம் ரிலீஸுக்கு ஆறு மாதம் முன்பே சம்பளம் கொடுத்து, அதையும் தாண்டி, மரியாதையை கொடுப்பதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம். உங்களுக்கு தெரியாதது இல்லை. நீங்கள் எல்லாத்தையும் பார்த்துதான் வந்திருக்கிறீர்கள் என்று பேசிய சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து பேசிய அந்தணன், சிவகார்த்திகேயனுக்கு சின்ன நடிகை போதும்பா என்று இருந்த நேரத்தில், அன்னைக்கு டாப்ல இருந்த ஹன்சிகா மோத்வானியை கொண்டு வந்து ஹீரோயினாக போட்டு சிவகார்த்திகேயனை வளர்ந்துவிட்டவர் மதன் அவரை மறந்துவிட்டார். அதே போல சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தவர் தனுசும் கூட, அப்ப தனுஷூம் சம்பள பாக்கி வச்சாரா என்பதை எல்லாம் தெளிவாக சொல்லாமல், பொத்தம் பொதுவாக போகிற போக்கில் சிவகார்த்திகேயன் இப்படி பேசியது அனைவரையும் காயப்படுத்தி உள்ளது. முன்பு போல சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்திருந்தால், சிவகார்த்திகேயன் பேசியதற்கு அவர் மீது ஒரு விசாரணையை வைத்திருப்பார்கள்.
தற்போது சிவகார்த்திகேயனுக்கு பின்புலமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. இதனால், தான் யார் என்னை என்ன செய்துவிடமுடியும் என்று நினைத்து வாய்க்கு வந்ததை பேசுகிறார். சிவகார்த்திகேயனுக்கு மேடை புதிது கிடையாது, ஒரு மேடையில் நான் பதட்டத்தோடு பேசிட்டேன், அந்த நேரத்துல என்னமோ தோணுச்சு நான் பேசிட்டேன் அப்படி எல்லாம் அவர்கள் சொல்ல முடியாது. ஏன் என்றால், அவர் வளர்ந்ததே மேடையில் பேசித்தான் இதற்கு பிறகாவது சிவகார்த்திகேயன் நிதானமாக பேச வேண்டும என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.