என்னாச்சு..! போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ்! 

 
1

ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ் அதன் பின்னர் தெலுங்கு படங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருகிறார்.

2017 ஆம் ஆண்டு மெண்டல் மதிலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் 2020-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரமுலோ படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருப்பார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் விராட பருவம், தாஸ் கா தம்கி, பூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை அவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனக்கு யாரும் துபாயில் வீடு வாங்கி தரவில்லை என்றும் தனக்கான சென்னையில் எஃப் 1 ரேஸ் நடப்பதாக வெளியான தகவல்களும் வெறும் வதந்தி தான் என்றும் அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை வழிமறித்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தனது கார் டிக்கியை திறக்க முடியாது என்றும், இதை ஏன் ரெக்கார்ட் செய்கிறீர்கள் என கேமராவை ஆஃப் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் போலீஸ் உடையை அணிந்திருந்தவர்கள் காலில் கிராக்ஸ் செருப்பை அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் இது படத்துக்கான புரமோஷன் என்று கலாய்த்து வருகின்றனர். ஆனால், எந்த படத்துக்கான புரமோஷன் என்பது இதுவரை தெரியவில்லை. விரைவில் நிவேதா பெத்துராஜ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


 

From Around the web