என்னது..! விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’ தமிழ் படத்தின் காப்பியா..?
கடந்த 1995ஆம் ஆண்டு பாக்யராஜ் நடித்து இயக்கிய ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற படத்தை தான் பட்டி டிங்கரிங் பார்த்து ‘பேமிலி ஸ்டார்’ என்ற படத்தை எடுத்துள்ளதாகவும் அந்த படமாவது காமெடி மற்றும் ஜனரஞ்சகமான திரைக்கதை இருந்ததால் படம் பார்க்கும் வகையில் இருக்கும், ஆனால் அந்த படத்தின் கதையை பார்த்து ஒரு மோசமான படமாக உருவாக்கியுள்ளார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ படத்தில், தான் காதலிக்கும் பெண்ணிடம் கெத்தாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாக்யராஜ் செய்யும் சில பில்டப்புகளை அப்படியே எடுத்து இந்த படத்தில் தற்போதைய காலத்திற்கு தகுந்த மாதிரி மாற்றி இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. சுத்தமாக லாஜிக் இல்லாத கதையம்சம் என்றும் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூருக்கு கெமிஸ்ட்ரி இல்லை என்றும் இது போன்ற ஒரு மோசமான படத்தில் விஜய் தேவரகொண்டா எப்படி நடித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் பாக்யராஜ் படத்தின் காப்பி என்ற தகவல் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.