என்னாச்சு..? திடீரென பெயரை மாற்றிய நடிகர் கார்த்திக் மகன்..!

நடிகர் கார்த்திக் 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக கொடிகட்டி பறந்தார். நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் கௌதம் கார்த்திக். காதல் மற்றும் குடும்ப பாங்கான படங்களில் நடித்து பெயர் வங்கி இருக்கிறார். அவரை போலவே அவருடைய மகனும் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2013 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் முதல் படமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் தான்.
இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகை ராதாவின் மகளான துளசி நாயர் நடித்திருந்தார். துளசி நாயர் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே கார்த்திக் மற்றும் ராதா ஜோடி பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதை போலவே அவர்களுடைய வாரிசுகளும் ஒன்றாக நடித்ததால் படம் வெளியாவதற்கு முன்பு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.
கௌதம் கார்த்திக்கிற்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு அவருடைய வாழ்க்கையே மாற்றியது. தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்த போது மஞ்சுமா மோகனை காதலித்த கௌதம் கார்த்திக் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கெளதம் கார்த்திக் தன் பெயரை "கௌதம் ராம் கார்த்திக்" என்று மாற்றி இருக்கிறார். இன்று வெளியாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படத்தின் போஸ்டரில் இந்த பெயரை மாற்றி இருக்கிறார். அதுபோல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன் பெயரை மாற்றி இருக்கிறார். மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர் போன்ற பலர் கௌதம் ராம் கார்த்திக் உடன் நடித்திருக்கிறார்கள்.