என்னாச்சு..? திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்..!
 Aug 19, 2024, 07:35 IST
                                        
                                    
                                 
                                    
                                
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் சிறப்பாக நடித்த மோகன்லால் பிரபுவுடன் இணைந்து சிறச்சாலை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு கமலஹாசன் உடன் உன்னைப்போல் ஒருவன் படத்திலும், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான், ரஜினியுடன் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 
                                
                                இந்த நிலையில், தற்போது நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், தசைவலி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணத்தினால் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை அடுத்த ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் மாறும் ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அண்மையில் இடம் பெற்ற வயநாடு நிலச் சரிவின்போது ராணுவ சீருடை அணிந்து மீட்புப் பணியில் களமிறங்கிய மோகன்லால் அவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் நிதி உதவி செய்திருந்தார். தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 - cini express.jpg)