லாஸ்லியாவுக்கு என்ன ஆச்சு..? சமீபத்திய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
 

 
லாஸ்லியா மரியநேசன்

பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்த லாஸ்லியா சமூகவலைதளத்தில் புதியதாக பதிவிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் இயங்கி வரும் பிரபல தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவருக்கு இருந்து வரும் ரசிகர் வட்டத்தை கண்டு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டார்.தன்னுடைய இலங்கை தமிழாலும், குழந்தை போல இருக்கும் நடவடிக்கையாலும் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவுடன் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன.

அதன்படி தற்ஓது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ‘ஃபிரெண்ட்ஷிப்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘கூகுள் குட்டப்பன்’ விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்த புதிய புகைப்படத்தை லாஸ்லியா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ஏன் உடல் இளைத்துவிட்டீர்கள் என்று கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web