என்ன ஆச்சு சன்னிலியோனுக்கு.. அச்சச்சோ..!

 
1

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகை ஆன சன்னிலியோன் தமிழ், தெலுங்கு மொழிகளில் சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் சில படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் முதல் முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்க நடிகை சன்னி லியோன் ஒப்புக்கொண்டு இருந்த நிலையில் அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் சன்னி லியோன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் பூஜைக்கு கற்பூர ஆரத்தி காட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

அப்போது சன்னி லியோன் தானே தீப்பெட்டியை எடுத்து கற்பூரத்தை கொளுத்த முயன்ற போது அவரது கையில் தீ சுட்டுவிட்டது. ஆனால் அவர் தீ சுட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கையை உதறிக் கொண்டே பூஜையில் சர்வசாதாரணமாக கலந்து கொண்டார். 

இதே நம்மூர் நடிகைகளாக இருந்தால் கத்தி அலறி ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பார்கள். ஆனால் சன்னி லியோன் தன் விரலில் சூடுபட்ட போதிலும் அவர் அதை அலட்டிக்கொள்ளாமல் பூஜையில் சர்வ சாதாரணமாக கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இது குறித்த வீடியோவை சன்னி லியோன் வெளியிட்டு மலையாள படத்தில் முதல் முதலாக பங்கு பெறுவதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இருந்தாலும் என் கையை சுட்டுக் கொண்டது துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்

From Around the web