என்னாச்சு உங்களுக்கு..! கையில் bandage உடன் நடிகை குஷ்பூ ..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹீரோயினாக ஜொலித்த குஷ்பூ தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் பாஜக கட்சியின் நிர்வாகியும் ஆவார்.
இந்நிலையில் தற்போது குஷ்பூ கையில் பேண்டேஜுடன் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் எதிர்பாராத காயங்கள் நம்முடைய பயணத்தை நிறுத்த முயற்சித்தாலும் அதனை நிறுத்தாமல் புன்னகையுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் எப்படி காயம் ஏற்பட்டது என்ற காரணத்தை சொல்லவில்லை. மேலும் ரசிகர்கள் பலரும் குஷ்பூ விரைவில் குணமடைய வாழ்த்தி வருகிறார்கள்.
அவர் வெளியிட்ட பதிவில் "எதிர்பாராத காயம் உங்களைத் தடுக்கும்போது, நிறுத்தாதீர்கள். புன்னகையுடன் பயணத்தைத் தொடருங்கள். " என குறிப்பிட்டுள்ளார்.குறித்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் "உங்க ரசிகர் வேண்டுகோள்படி தயவுசெய்து கவனமாக இருங்கள் மேடம்."போன்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.